Thursday, February 16, 2017

அல்லல் போம் !!!  அன்னை வயிற்றில் பிறந்த துன்பம் போம்!!!

பிறவி பெருங்கடலை இறைவன் அருள் இன்றி நீந்துவது அவ்வளவு எளிதான  காரியமல்ல ......
எல்லா பிறப்பும் பிறந்து இளைத்தேன் என்கிறார் மாணிக்கவாசகர் ....
ஞானிகளும் ,மகான்களும் மீண்டும் மீண்டும் பிறப்பதை விரும்பவில்லை ....அவர்கள் பிறவா தன்மை பெறவே 
விரும்பினர்......

அன்பர்களே மீண்டும் அன்னை வயிற்றில் பிறவா தன்மை அருளுவதால் இத்தலத்திற்கு கருவிலி என்ற சிறப்பு பெயர்..

குடந்தை --பூந்தோட்டம் சாலையில் கூந்தலூர் பேருந்து நிறுத்தத்திலிருந்து ஒன்றரை கிலோமீட்டர் தொலைவில் உள்ளது கருவிலி எனப்படும் இத்தலம் .....அழகிய நந்தவனத்துடன் கூடிய , மிக சுத்தமாகவும் சிறப்பாகவும் பராமரிக்கப்படும் இத்திருக்கோயில் உறையும் இறைவன் சர்குணேஸ்வரர் ....இறைவி சர்வாங்க சுந்தரி .......சுமார் 6 ஆடி உயரத்துடன் அற்புதமாக சேவை சாதிக்கும் அழகை காண கண் கோடி வேண்டும் ...

இத்தலத்தில் இப்பெருமானையும் , சர்வாங்க சுந்தரியையும் வணங்குபவர்களுக்கு மீண்டும் பிறப்பு என்பது கிடையாது ....

தேவார பாடல் பெற்ற முக்தி தலமாகிய இத்திருக்கோயிலை அன்பர்கள் அவசியம் தரிசித்து  பலன்   பெற வேண்டும் 



Tuesday, February 7, 2017

சிவநேய செல்வர்களின் சீரிய கவனத்திற்கு .....

ஞானிகள் , ரிஷிகள், மகான்கள் , சித்தர்கள் என பலராலும் வணங்கி வழிபட பெற்ற பல்லாயிரக்கணக்கான திருமேனிகள் , பின்னர் வந்த மாமன்னர்கள் பலரால் போற்றி பாதுகாக்கப்பட்டு ,பிரம்மாண்டமான திருக்கோயில்கள்  அமைக்கப்பட்டு , வழிபாடு செய்யப்பட்டு வந்தது .......

இன்று கால மாற்றங்களினாலும் , அந்நியர்கள் படையெடுப்பாலும் , அவை நிர்மூலமாக்கப்பட்டு சீர்குலைந்து ,பெருமான் தன்னந்தனியே , வானம் பார்த்த திருமேனியராய் , திருக்கோயில் இன்றி , வழிபாடின்றி 
ஏராளமான திருமேனிகள் நம் தமிழகத்தில் காண கிடைக்கின்றன .....

நமது பொறுப்பின்மையும் இதற்கு ஒரு காரணம் .....

அன்பர்களே .....இதோ இங்கே பாருங்கள் .....வீடு கட்டப்படுவதற்காக இப்பெருமான் சாலை ஓரத்திற்கு வந்து விட்டார் ..

எங்கே இருக்கிறார் இவர் ?  
திருவாரூர் மாவட்டம் ,திருத்துறைப்பூண்டி வட்டம்,நேமம் வங்க நகர் செல்லும் சாலையில் , இளநகர் என்னும் கிராமத்தில் தான் இவர் சாலை ஓரத்திற்கு தள்ளப்பட்டுவிட்டார் ......

விவசாய கூலி வேலை செய்யும் எளிய மக்கள் வசிக்கும் பகுதி இது .

இந்நிலை கண்டு வருந்திய சிவபீடம் அமைப்பினர் இப்பெருமானுக்கு  மேற்கூரை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர் ....

இத்திருப்பணியில் நீங்கள் பங்கு பெற விரும்பினால் சிவபீடம் நிறுவனர் திரு சிவ . முத்துராமன் அவர்களை அவரது அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் ....

சிவ முத்துராமன்( www.sivapeedam.org)

சிவபீடம் 9443390589