Tuesday, March 7, 2017

இழக்கலாமா இத்தகைய அரிய 

பொக்கிஷங்களை?

அற்புத சிற்ப வேலைபாடுகள் நிறைந்த துக்காச்சி (துர்க்கை ஆட்சி) ஆபத்சகாயேஸ்வரர் திருகோயில்.
ஒரு காலத்தில் 7 பிரகாரங்களுடன் பிரம்மாண்டமாக விளங்கியதாம் . இரு திரு குளங்கள் கோவிலுக்குள்ளேயே விளங்கியது.
இன்று களை இழந்து , சோபையின்றி ,பக்தர்கள் வரவும் இன்றி , ஏகப்பட்ட இடிபாடுகளுடன் காட்சியளிக்கிறது .
அரசு சார்பில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்றாலும் அது நிச்சயமாக போதுமானது அல்ல.
இறைவனின் எல்லையற்ற கருணையுடன், பக்தர்களின் பேராதரவும் அவசியம்.
பெயருக்கு ஏற்றாற்போல் துர்கை அம்மன் தனி சந்நிதி கொண்டு மிக எழிலுடன் வரப்ரசாதியாகவும் விளங்குகிறாள் .

இறைவன் திருப்பெயர் ஆபத்சகாயேஸ்வரர் 
துக்காச்சி குடந்தை நாச்சியார்கோயில் வட்டத்தில் நன்னிலம் செல்லும் வழியில் அமைந்துள்ளது.