Wednesday, June 29, 2016

5 முறை நிறம் மாறும் ஈக்காடு பஞ்சவர்ணேஸ்வரர் 

அன்பர்களே....

திருவள்ளூர் மாவட்டம் பல அரிய  புராதனமான திருக்கோயில்களை தன்னகத்தே கொண்டு விளங்குகிறது .....
அவற்றுள் பல பக்தர்கள் வருகையின்மையால் வெளிச்சத்திற்கு வராமலே உள்ளன......

அவற்றில் ஒன்று திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் செல்லும் வழியில் உள்ள ஈக்காடு என்னும் கிராமம் ...
இங்குள்ள சிவன் கோவிலில் மூலவரான பெருமான் இன்னதென்று அறிய முடியாத வகையில் தாமரை தண்டு போன்ற பாண வடிவம் கொண்டு  அருள் பாலிக்கிறார்.  

தஞ்சை மாவட்டம் நல்லூர் கல்யாணசுந்தரேஸ்வரர் திருக்கோயில் போன்று ,  இவர் நிறம் மாறுவது பேரதிசயம் .....

சிதிலமடைந்து பூசை புனஸ்காரங்கள் நின்று போயிருந்த இத்திருக்கோயிலை, கிராம மக்கள் அரும்பாடு பட்டு புனரமைத்து , தற்போது 2 காலங்கள் நித்திய பூசைகள் நடைபெற்று வருகிறது ....

இங்கு உறையும் பெருமான் தன்னை நாடுவோர்களுக்கு , இம்மையில் மட்டுமல்ல மறுமையிலும் , அனைத்து நலன்களையும் அள்ளி  தர தயாராக உள்ளார் ....பெற்று வர நீங்கள் தயாரா? 

இங்குள்ள குழந்தை ஈஸ்வரர் சந்நிதியில் வேண்டுபர்களுக்கு மழலை பாக்கியம் சித்திக்கும் ..

எங்கே உள்ளது ?

திருவள்ளூர் ---redhills  சாலையில் ஈக்காடு பேருந்து நிறத்திலிருந்து கூப்பிடு தூரம் தான் ...அல்லது தாமரைப்பக்கம்  கூட்டு ரோட்டிலிருந்து  திருவள்ளூர் செல்லும் சாலையிலும் செல்லலாம் ,,,,







Tuesday, June 28, 2016

கனவில் வந்து கட்டளை இட்டார் மீனாக்ஷி ....சிரமேற்கொண்டர் மாமுனி பரஞ்சோதியார் ..

மீனாக்ஷி அம்மனின் கட்டளை படி திருவிளையாடல் புராணம் எழுதிய பரந்ஜோதிமுனிவர்...  3363 செய்யுளை கொண்டது  இப்புராணம் ...

மதுரையை பற்றிய நான்மாடக்கூடல் புராணம் இயற்றியவரும் இவரே.... 
பிறந்த ஊர் வேதாரண்யம்..

தமிழுக்கும் , ஆன்மீக வளர்ச்சிக்கும் எண்ணற்ற  சேவை  புரிந்த இந்த தவ சித்தர் பற்றி எவ்வளவு பேர் அறிவீர்கள்? இவர் தன் இறுதி காலத்தை திருவாரூர் அடுத்த  சேகல் மடப்புரம் என்னும் கிராமத்தில் கழித்தார்....
இங்கு மடம் ஏற்படுத்தி தொண்டு செய்து வந்தார்.

 திருத்துறைபூண்டிto நாகப்பட்டினம் ECR சாலை பாமணி லிருந்து உம்பளச்சேரி செல்லும் சாலையில் சேகல் மடப்புரம் அமைந்துள்ளது ....

இங்கு அவருக்கு ஜீவ சமாதியும் அமைந்துள்ளது .....அருகிலேயே இவர் வணங்கி வழிபட்ட பரஞ்சோதீஸ்வரர் திருக்கோயில் மிகவும் சிதிலமடைந்த நிலையில் உள்ளது ....

சேக்கிழார் இயற்றிய பெரிய புராணம் வல கண்ணாகவும் இம்மகான் இயற்றிய திருவிளையாடல் புராணம் இட கண்ணாகவும் கச்சியப்ப சிவாச்சாரியார் இயற்றிய கந்தபுராணம் நெற்றி கண்ணாகவும் சான்றோர் பெருமக்களால்  இன்றளவும் மதிக்கப்படுகிறது ....

இத்துணை பெருமை வாய்ந்த இம்மகானை ,பரஞ்சோதி மாமுனிவர் மீது எல்லையற்ற அன்பு கொண்ட
மடப்புரம் கிராமத்தை சேர்ந்த ஆசிரியர் மு .பரமசிவம் (9698943397) வியாழன் தோறும் அப்பெருமானுக்கு சிறப்பு பூசைகள் செய்து , அங்குள்ள மக்களை ஒன்றிணைத்து தேவார திருவாசக முற்றோதல் போன்ற பணிகளை செய்து வருகிறார் ...அன்ன  தானமும் உண்டு .....
இத்திருக்கோயிலும் , பரஞ்சோதி முனிவரின் ஜீவ சமாதியும் திருப்பணி செய்யப்படவேண்டிய நிலையில் உள்ளது ..அன்பர்களே....

திருப்பணி வேலைகள் நடைபெறுகிறது தங்களை இணைத்து கொள்ள விருப்பம் உள்ள அன்பர்கள் தங்களை இணைத்துகொண்டு முனிவரின் அருள் பெற வேண்டுகிறோம்
சிவபீடம் 9443390589
கோவில் திருப்பணி குழு செல் நம்பர்கள்
99428 70490
96986 52198
96989 43397



முயற்சிக்க சித்தமாயிருக்கும் மக்கள் ....முட்டுக்கட்டை போடும் அரசு ....

அன்பர்களே...

திருவிடைமருதூர் மஹாலிங்க ஸ்வாமி திருக்கோயிலை காப்பாற்ற ஒன்று கூடுங்கள்...

பதற வேண்டாம்....இது  தஞ்சை மாவட்டம் , மயிலாடுதுறை வட்டத்தில் உள்ள மகாலிங்க ஸ்வாமி திருக்கோயில் அல்ல. நாகை மாவட்டம் ., திருக்குவளை வட்டம், திருத்துறைப்பூண்டி-நாகை சாலையில் உள்ள  மகாலிங்க ஸ்வாமி திருக்கோயில் ....

3 ஆம் குலோத்துங்க சோழனால் கட்டப்பட்ட காலை களஞ்சியம் ,,,,.இன்று சின்னாபின்னமாகி அதன் மொத்த அழகையும் தொலைத்து நிற்கிறது ......பார்ப்பவர் நெஞ்சை பதற வைக்கிறது ...

அன்பர்களே......இத்திருக்கோயிலின் சிறப்புகள் பார்ப்பவர்கள் விழிகளை விரிய வைக்கும் ...
எந்த திருக்கோயிலிலும் அதனை கட்டிய மாமன்னன் சிலை மூலவருக்கு நேரெதிரே கை கூப்பிய நிலையில் காண முடியாது 

இங்கு காணலாம் ...

எந்த திருக்கோயிலிலும் அமர்ந்த நிலையில் உள்ள துர்கை அம்மனை காண முடியாது ..

இங்கு காணலாம் ...

எந்த திருக்கோயிலிலும் சனி பகவான் இரு காக்கை வாகனங்களுடன் காண முடியாது 
இங்கு காணலாம் ...

எந்த திருக்கோயிலிலும் இல்லாத வகையில் சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த பிரம்மாண்டமான சண்டிகேஸ்வரர் திருமேனி இங்கே உள்ளது ....இவ்வாறு சொல்லி கொண்டே போகலாம்..

இதன் சிறப்புகளை .....
இவ்வாறு ஏராளமான அற்புதங்களை , சூட்சும ரகசியங்களை உள்ளடக்கிய இத்திருக்கோயிலை கட்டிய குலோத்துங்க சோழன் கண்டால் கதறி அழுது விடுவார் ....
அம்பாள் கேட்டதை வாரி வழங்கும் வள்ளல் ...ஆகையால் இதை  தெரிந்து வைத்துள்ள திரைப்பட துறையினரும் அவ்வப்போது இங்கு வந்து வணங்கி செல்கின்றனராம் ...

அன்பர்களே   இனியாவது காலம் தாழ்த்தாமல் தமிழக அரசு இத்திருக்கோயிலுக்கு முறையாக வழங்க வேண்டிய அனுமதியையும் , பொருள் உதவியையும் வழங்கி , மக்களின் உணர்வுகளோடு ஒன்றிய இத்திருக்கோயிலை புனரமைத்து தமிழக மக்களிடம் ஒப்படைக்க வேண்டும் ......

இது அரசின் தலையாய கடைமை ....

அன்பர்களே.. கிராம வாசிகள் திருப்பணி குழு அமைத்துள்ளனர்..  அதன் விபரங்கள்..
STATE  BANK  OF  INDIA 
திருத்துறைப்பூண்டி கிளை 
SBI  A / C NO : 35074643072
IFSC  CODE  NO  000936  
தொடர்புக்கு :

9486074234, 9787653065, 9626749735, 9843343317
EMAIL :
Srimahalingamswamy@gmail.com



Monday, June 27, 2016

கூழமந்தல் கிராமம், திருவண்ணாமலை 

மாவட்டம், 

செய்யாறு வட்டத்தில் அமைந்துள்ளது. முதலாம் ராஜேந்திரனின் சிறப்புப் பெயர்களுள் ஒன்று, விக்கிரமசோழன். அவனது ஆட்சி காலத்தில் இவ்வூர், விக்கிரமசோழபுரமாக விளங்கியது. ராஜேந்திர சோழன் கங்கை வரை படை எடுத்துச் சென்றபோது இங்கு தங்கி இருந்ததாகவும் இப்பகுதி, இம்மன்னனுக்குப் பிடித்துப்போனதால் இந்த மண்டலத்தில் திருஒற்றியூர், வானவன் மாதேவிபதி, காவாந்தண்டலம், உக்கல் உள்ளிட்ட இடங்களில் கலைக்கோயில்கள் எழுப்பப்பட்டன. பின்னர் இவை அனைத்தும் திருக்கோயில்களாக மாற்றம் பெற்றன.

 இவற்றுள் சிகரமாக விளங்கிய கூழமந்தலில் பல அற்புதமான கோயில்கள் கட்டப்பட்டன. இவைகளில் மேற்கில் அமைந்த பேசும் பெருமாள் திருக்கோயிலும் ஈசான்யத்தில் அமைந்துள்ள கங்கைகொண்ட சோழீச்சுரமும் அடங்கும். வரலாற்றுச் சிறப்புடைய இவ்வூரின் ஈசான்ய மூலையில் அமைக்கப்பட்டு வருகிறது நட்சத்திர திருக்கோயில்! விநாயகரை பிரதானமாகக் கொண்டு அஸ்வினி நட்சத்திரம் முதல் ரேவதி நட்சத்திரம் வரையிலான 27 நட்சத்திரங்களுக்கும் உரிய விருட்சங்கள் பிரதிஷ்டை செய்யும் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன.


Friday, June 24, 2016


வறுமையில் வாடுபவர்கள் வணங்க வேண்டிய 

திருக்கோயில் 

1974 லில் கடைசியாக கண்டுபிடிக்கப்பட்ட தேவார பாடல் பெற்ற திருத்தலம் கிளியன்னவூர் ....

இன்று நாம் காண இருக்கும் திருத்தலம் இதுதான்.அகத்திய முனிவறால் உருவாக்கப்பட்டது .

சுகப்பிரம்ம மகரிஷி வழிபட்டதால் "கிளியன்னவூர்' என் அழைக்கப்படும் தலம். காலவ முனிவரும் வழிபட்டுள்ளார் . ஆதிசேஷன் வணங்கி நற்கதி அடைந்துள்ளான்.

வழிபடும் பக்தர்களின் கொடிய நோய்களை விரட்டி, வறுமையை போக்கும் பரிகாரதலமாக 
இத்தலம் விளங்குகிறது.


வயிற்று வலியால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வந்து இறைவனுக்கு பாலாபிஷேகம் செய்து வழிபட அவர்கள் நோயிலிருந்து விடுபடுவர் .....
திருமண தடை , மழலை வரம் , கல்வி கேள்விகளில் முதன்மை பெறவும் இங்கு பிரார்த்திக்கலாம் 

விழுப்புரம் மாவட்டம், வானூர் வட்டத்தில் உள்ளது.



Thursday, June 23, 2016

ஐந்து மூலவர்கள் கொண்ட ஒரே திருக்கோயில் ...

அதுவும் தேவார பாடல் பெற்ற தலம் ...பஞ்ச பாண்டவர்களும் லிங்கம் ஸ்தாபித்து வழிபட்ட தலம் ......

அதிக பட்ஷமாக 2 மூலவர்கள் திருவொற்றியூர், அச்சிறுபாக்கம் போன்ற திருத்தலங்களில் உள்ளனர் ....

ஆனால் 5 மூலவர்கள் ஒரே திருக்கோயிலில் இருப்பது  உலகிலேயே இங்கு தான் ...

அதுவே இலுப்பைப்பட்டு ....மணல் மேடு என்றும் வழங்கப்படுகிறது ..இலுப்பை மரங்கள் அடர்ந்த காடு என்பதால் இப்பெயர்..

தேவார பாடல் பெற்ற தலங்களில் இது 30 ஆவது தலம் இது ..நீலகண்டேஸ்வரர் பிரதான மூலவர் ..இவர் தருமரால் வழிபட பெற்றவர்...இவரை சுற்றி ஏனைய நால்வரும் வணங்கிய பெருமான்கள் லிங்கதிருமேனியராய் தனி தனி சந்நிதிகளில் அருள்புரிகின்றனர்.

அவற்றுள் பீமன் வழிபட்ட இறைவனும் , நகுலன் வழிபட்ட இறைவனும் அளவில் மிகப்பெரிய திருமேனிகள் .
பீமன் வழிபட்ட திருமேனி 16 பட்டைகளை உடைய சோடச லிங்கத்திருமேனியும் கூட .....

பல்வேறு சிறப்புகளை பெற்ற இத்தலம் பக்தர்கள் வருகை இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது ....
மிகுந்த பொலிவுடன் திகழும் இத்திருக்கோயிலில் புள்ளினங்கள் ,புறாக்கள் மிகுந்த சுதந்திரத்துடன் உலா வருகின்றன பக்தர் வருகை இன்மையால் ....

அவைகளுக்கு தெரிந்துள்ளது ஈசன் அருள் எவ்வளவு பலமானது , அத்தியாவசியமானது என்று ...
மனிதர்களாகிய நாம் எப்போது உணர்ந்துகொள்ளப்போகிறோம் ?

சரி இருப்பிடம் சொல்கிறேன்...

திருப்பனந்தாள் ----சீர்காழி சாலையில் உள்ளது மணல்மேடு ...இங்கிருந்து சரியாக ஒரு கிலோ மீட்டரில் உள்ளது இலுப்பைப்பட்டு  தலம் ...

சீர்காழி , வைத்தீஸ்வரன் கோயில் போன்ற இடங்களில் இருந்தும் வரலாம் ...பந்தநல்லூர் சாலை என்று கேட்டு வர வேண்டும்.  மணல் மேட்டில் இறங்கி கொள்ள வேண்டும் ...
பஸ் வசதி நிறைய உண்டு.



இவை முறையே நகுலன், பீமன் அர்ஜுனன் வழிபட்ட லிங்கங்கள் 





Wednesday, June 22, 2016

தண்டலை நீள்நெறி ----திருவாரூர் திருத்துறைப்பூண்டி 
சாலையில் உள்ள தேவார பாடல் பெற்ற தலம் ..
இறைவன் திருநாமம்  ஸ்திர புத்தீஸ்வாரர் எனப்படும் நீள்நெறியப்பர் .....தன்னை வணங்குபவர்களுக்கு நல்ல ஸ்திரமான நற்குணங்களை அருள்பவர் என்று பொருள்..

அரிவாட்ட நாயனார் செந்நெல் , மாவடு கீரை கொண்டு தினசரி நெய்வேத்தியம் செய்து வழிபட்ட தலம்
கோச்செங்கட்சோழன் நோய் தீர்த்த தலம் .
அம்மன்னன் கட்டிய மாட  கோயில்களுள் இதுவும் ஒன்று 
நூபுர கங்கை எனும் தீர்த்தம் உள்ள தலம் 
ஞானசம்பந்தர் பதிகம் பெற்ற தலம் 
உச்சி கால பூசைக்கு வர முடியாமல் போனதற்காக அரிவாட்ட நாயனார் தன் கழுத்தை தானே அறுத்து கொள்ள முயற்சித்த போது , பூமியிலிருந்து இறைவன் கை நீண்டு ,நாயனாரை தடுத் தாட்கொண்ட தலம்.

இத்தலத்தை பற்றி பாடி ,இறைவன் அருளால் தினசரி ஒரு பொற்காசு , படிக்காசு நாயனார் பெற்ற தலம் 
புலிக்கால் முனிவரும் பதஞ்சலி முனிவரும் வணங்கிய தலம் .

இன்னும் ஏராளமான பெருமைகள் இத்தலத்திற்கு உண்டு ...
இத்தலத்தை வணங்கிய முனிவர்களும் ஏராளம் ..அவர்கள் வணங்கிய திருமேனிகள் பிரகாரத்தில் உள்ளன .

விவசாயிகள் தங்கள் நிலத்தை பயிர் செய்வதற்கு முன் இங்கு வந்து பிரார்த்தனை செயகிறார்கள் ..
அவ்வாறு செய்தால் பயிர் நன்கு செழித்து வளரும் என்ற நம்பிக்கை நிலவுகிறது ...

குஷ்ட நோய் தீர்க்கும் தலமாகவும் இது விளங்குகிறது .....

இத்தகைய பெருமைகளை பெற்றிருந்தும் , பக்தர்கள் வருகை இன்றி திருக்கோயில் வெறிச்சோடி கிடக்கின்றது ..

நாயனாரும் அவர் மனைவியும் .....


Tuesday, June 21, 2016

நிதி சுமையால் நின்று போன அரசவனங்காடு  அரன் ஆலயம்...

அன்பர்களே  குடந்தை திருவாரூர் சாலையில் அரசவனங்காடு உள்ளது .....
ஒரு காலத்தில் அரச மரங்கள் அடர்ந்த பகுதியாக இருந்து வந்தது ...இங்கு மிக புராதன மான பக்தர்கள் வருகை அற்ற கைலாசநாதர் திருக்கோயில் இருக்கிறது ...

இங்கிருந்து ஒரு கிலோ மீட்டர் இடது புறம் திரும்பும் சாலையில் பயணித்தால் தீபன்குடி என்னும் சிற்றூர் வருகிறது ...இங்கு பிரம்மாண்டமான ஜைன ஆலயம் ஒன்று உள்ளது ..இதன் அருகில் பன்னெடும் காலமாக வெட்ட வெளியில் அருள்பாலித்து வந்தார் கைலாசநாதர் .....


சுமார் 3000 ஆண்டுகள் பழமை வாய்ந்தவர்  இவர் என கணக்கிடப்பட்டுள்ளது .....பெருமான் திருமேனி எங்கும் உளி கொண்டு  செதுக்கியது போன்று  காணப்படுகிறது .....
தற்போது ஓலை கூரையில் வைத்து பூசிக்கப்படுகிறார் ....சுமார் 45 லட்சம் செலவில் திருக்கோயில் அமைக்கப்பட்டு விட்டது ....இன்னமும் 40 லட்ஷம் இத்திருக்கோயிலை பூர்த்தி செய்ய தேவைப்படுகிறது ....
அம்பாள் , மிகுந்த எழில் வாய்ந்த விநாயகர் ,நந்தி ,முருகன் ஆகியோரும் உள்ளனர்.
ஆச்சர்யமான உண்மை என்னவென்றால் இந்த திருப்பணி ஒரே குடும்பத்தினரால் செய்யப்பட்டு வருகிறது .

ஆனால் ஒரே ஒருவரால் இதற்கு மேல் எப்படி செலவிட முடியும் ......அன்பர்களாகிய  நம் பங்களிப்பும் தேவை  அல்லவா?

நீங்கள் இத்திருப்பணியில் பங்கு பெற விரும்பினால் கீழ் கண்ட அலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் .இவர் கோயில் அருகிலேயே உள்ளார் ...

திரு பழனி
அலைபேசி எண் :7373205099

தீபங்குடி கைலாசநாதரை எப்போது வேண்டுமானாலும் தரிசிக்கலாம் ....
இவரை தரிசிப்பதால் நாம் எண்ணிய யாவும் கைகூடும் ...இது அனுபவத்தில் கண்ட உண்மை ..


Saturday, June 18, 2016

செல்லூர் கைலாசநாதர் திருக்கோயில் 


செல்லூர் ...கொரடாச்சேரி வட்டம்.  குடவாசல் தாலூகா ...திருவாரூர் மாவட்டம்..
தேவார பாடல் பெற்ற தலமான திருக்கொள்ளம்பூதூர் செல்லும் வழியில் உள்ளது செல்லூர் ...
திருப்பணி செய்யப்பட்டு மிகவும் நேர்த்தியாக விளங்குகிறது ....

எங்கும் சுத்தமாக ......சுற்றிலும் தோட்டங்கள் .....மலர் செடி கொடிகள் என திருக்கோயில் அழகாக காட்சியளிக்கிறது .....
இது ஒரு தேவார வைப்பு  தலமும் கூட .

இறைவன் கைலாசநாதர் .....

அன்பர்களே ஆனால் பக்தர்கள் வருகை மிகவும் குறைவு தான் ....
தயங்காமல்  எல்லோரும் செல்லுங்கள் .....செல்லூர் ....


Thursday, June 16, 2016

நடந்து சென்று திருச்சேவை செய்த நமிநந்தி அடிகள் ......


திருநெய்ப்பேர் ......திருவாரூரிலிருந்து 8 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இத்திருத்தலத்திலிருந்து  திருவாரூருக்கு தினசரி நடந்து  சென்று அடியார் நமி நந்தி அடிகள் விளக்கேற்றி சேவை செய்துள்ளார் ....

அவர் இங்கு வாழ்ந்த இல்லம் இன்று கோவிலாகவே மாற்றப்பட்டுள்ளது ....

இத்தனை வாகன வசதிகள் இருந்தே நாம் தினசரி திருக்கோயிலுக்கு செல்ல சிரம படுகிறோம் .....
அன்னாரது ஆன்ம பலம் தான் என்னே ?

திருநெய்ப்பேர் .தேவார பெயர் ஏமப்பேரூர் ...இங்குள்ள வான்மீக நாதர் கோவில் நுழை வாசலிலேயே , நமிநந்தி அடிகள் .உருவ சிலை அமைக்கப்பட்டுள்ளது .....

அன்னை உமா மகேஸ்வரி ....
நமிநந்தி அடிகள் முக்தி அடைந்த தலமும்  இதுவே....அடிகள் கோயில் என்று இவர் பெயராலேயே இத்திருக்கோயில் அழைக்கப்படுகிறது ....

திருவாரூர் திருத்துறைப்பூண்டி மார்க்கத்தில் அடிகள் கோயில் பேருந்து நிறுத்தம். கோயில் எதிரிலேயே இறங்கி கொள்ளலாம் .....
பெருமான் ஒளி பொருந்திய திருமேனியரை காட்சி தரும் அழகு ....இன்றெல்லாம் பார்த்துக்கொண்டே இருக்கலாம்'

அடியார் பெருமக்கள் அவசியம் கண்டு தரிசிக்க வேண்டிய திருக்கோயில் இது .....
அர்ச்சகர் இல்லம் அருகிலேயே உள்ளது .....