Thursday, June 2, 2016

திருத்தியமலை ஏகபுஷ்ப ப்ரியநாதர் திருகோயில் .......
பூர்வ ஜென்ம வினைகள் நீக்கும் திருத்தலம் 

திருச்சி டோல்கேட் --துறையூர் சாலையில் பெரமங்கலம் கடைதெரு நிறுத்தத்திலிருந்து  5 கிலோமீட்டரில் ஒரு சிறிய குன்றின் மீது அமைந்துள்ளது .....மிக பழமை வாய்ந்த பிருங்கி மகரிஷி , அகத்தியர் ஆகியோர் வழிபட்ட  இந்த திருகோயில் ...

அன்னை தாயினும் நல்லாள் சமேத ஏக புஷ்ப பிரிய நாதர் ....

தேவலோக மலரான தேவ அர்க்ய வல்லி  என்ற மலர் பல காலம் தவம் இருந்து இத்தலத்தில் இறைவன் மீது நிரந்தர வாசம் செய்யும் வரத்தை அடைந்தது ....என்பது தல புராணம் ...அதனால் தான் இறைவன் இப்பெயர் பெற்றார் ......

சுமார் 5000 ஆண்டுகள் பழமையானது இந்த ஆலயம்.....இறைவன்  சுயம்பு .....

அன்பர்களே பேருந்து வசதி மிக குறைவு என்பதால் ..சொந்த வாகனங்களில் செல்வது உசிதம் .....
ஆட்டோ வசதி உண்டு .....

திருமண தடை நீக்கும் தலம் ...மற்றும் பிரம்மஹத்தி தோஷம் உட்ப சகல வித தோஷங்களும் இங்கு வந்து இந்த இறைவனை  உள்ளன்போடு பிரார்த்தனை செய்ய அறவே நீங்கும் என்பது திண்ணம் ...

11 திங்கட்கிழமை இங்கு வந்து இறைவனுக்கு வில்வத்தால் எவர் ஒருவர் அர்ச்சனை  செய்கிறார்களோ அவர்கள் பூர்வ ஜென்ம கர்ம வினைகள் அனைத்தையும் உடனுக்குடன் இப்பெருமான் நீங்கி அருள் புரிகிறார்...

இந்த அரிய வாய்ப்பை தவற விடலாமா? பயன்படுத்தி கொள்ள வேண்டாமா? 

1) Caretaker Ganesan: He has the temple key, and resides opposite to the temple. You can call him and visit the temple. He is very kind and helpful. Ph. no. 90472-61838.

2) Gurukkal Hari Subramaniam: Very young and friendly. You can contact him also.

Ph. No. 98655-27538




Wednesday, June 1, 2016

கதறி அழுதுவிடுவோம் கருவி திருகோயில் நிலை கண்டால் ......

இன்று  பிரதோஷம் அன்பர்களே....திருகோயில் தரிசனம் செய்ய மறந்து விடாதீர்கள்...
அதுவும் இதுபோன்று நலிவுற்ற திருகோயில்கள் தரிசனம்  பெரிதும் நன்மை பயக்கும்...

கருவிழுந்த நாதபுரம் என்பதே இன்று கருவி என்று வழங்கப்படுகிறது ....
ஒரு பிரளய காலத்தின் முடிவில் உயிர்கள் தோன்றுவதற்குரிய  பீஜங்கள் , கரு, சிதறி விழுந்த இடம் என்பதால் இப்பெயர் .....

எங்கு உள்ளது?

மயிலாடுதுறை --பூம்புகார் சாலையில் கருவி என்ற இடத்திற்கு முன் வரும் சாவடி கூட் ரோடு என்று கேட்டு இறங்க வேண்டும்..எதிரில் தென்படும் மேல்நிலை நீர்தேக்க தொட்டி வழியாக செல்லும் ஒரு சிறிய சந்தின் வழியே செல்ல 5 நிமிடத்தில் இத்திருகோயில் தென்படுகிறது .....

ஒரு நல்ல ஓவியத்தை கன்னாபின்னா வென்று கிழித்து போட்டது போல் உள்ளது இன்றைய கோயிலின் நிலை.
தல புராணம் என்று எதையும் அறிந்து கொள்ள முடியவில்லை .....உதவ ஒருவரும் இல்லை....கோயில் திருமேனிகள் அனைத்தையும் ஒரே shed இல் வைத்துள்ளார்கள்....ஒரே அழகிய திருமேனி கோவில் வெளியே காணப்படுகிறது ...அருகில் உள்ள கிடாரன் கொண்டான் என்னும் இடத்திலிருந்து அர்ச்சகர் ஒருவர் அவ்வப்போது வந்து பூசை செய்துவிட்டு செல்வதாக கூறுகிறார்கள் .... 

எது எப்படியோ ....இத்திருகோயிலை சீரமைக்க செப்பனிட நல்ல உள்ளங்கள் வரும் வரை இறைவன் காத்திருக்க வேண்டியது தான் ....


Tuesday, May 31, 2016

புறக்கணிக்கப்படும்  புராதன திருகோயில் --ராமஞ்சேரி 

அன்பர்களே .....ராமஞ்சேரி என்று ஒரு இடம் திருவள்ளூர் மாவட்டத்தில் ,பூண்டி தாலூகாவில் உள்ளது ....திருத்தணி செல்பவர்கள் கவனித்திருக்கலாம் ...அங்கு மிக பழமையான திருகோயில் ஒன்று ....மகாவிஷ்ணுவால் வழிபடபெற்றது ...இறைவனை மகாவிஷ்ணு வழிபடும் அபூர்வ திருகோலம் ....மூலவருக்கு பின்புறம் தான் நாம் கருவறையில் காணமுடியும் ....

கருவறையிலேயே மூலவரை மகாவிஷ்ணு வழிபடும் இத்தகைய தோற்றம் மிக அரிது ....
சைவ வைணவ ஒற்றுமைக்கு வழிகாட்டும் இத்தலம் சில ஆண்டுகள் முன்பு நான் சென்றிருந்த போது பிரதோஷ வழிபடு கூட நடைபெறாமல் பூட்டியே காணப்பட்டது ....

எத்தகைய  அற்புதமான் தலங்களை எல்லாம் நாம் இழக்கிறோம் என்று எண்ணும்போது மிக வேதனையாக இருக்கிறது ...
அன்பர்களே...தற்சமயம் இத்திருகோயில் எவ்வாறு உள்ளது ? பூசைகள்  நடைபெறுகிறதா? பக்தர்கள் வருகின்றனரா? என அறிந்து கொள்ள ஆவல் .....திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த அன்பர்கள் யாரேனும் உதவினால் மிகவும் நன்றாக இருக்கும் .......

அருகில் உள்ளவர்கள் கோவிலை திறந்து தரிசனம் செய்ய உதவுவார்கள் ...


Monday, May 30, 2016

கொக்கரையான் கோயிலை கண்டாயோ...?

எமதர்மராஜன் தன உதவியாளர்கள் அன்று எடுத்துவந்த ஆத்மாக்களை பார்த்து வினவுகிறான் .எத்தனை தவறுகளை செய்திருந்தாலும் , எந்த ஒரு நற் செயல்களையும் செய்யாவிடினும் ....
ஒருவன் கொக்கரையான் கோயில் கோபுரத்தை தரிசித்திருப்பான்  எனில் , அவன் செய்த பாவங்கள் அனைத்தும் அந்த நொடியில் விலகி சொர்க்க லோகத்தை அடைய அவன் தகுதி பெற்றவன் ஆகிறான் 

இப்படி ஒரு திருகோயிலா? தலமா ?

ஆம் அன்பர்களே ...இருக்கிறது ....
எங்கு உள்ளது ? நம் கொங்கு நாட்டில் தான் .....திருச்செங்கோடு அருகில் ...16 கிலோமீட்டரில் ..
திருச்செங்கோட்டிலிருந்து 16 கி.மீ தொலைவிலும், நெசவுத் தொழில் சிறந்து விளங்கும் பள்ளிபாளையத்திலிருந்து 10 கி.மீ தொலைவில், கங்கையினும் புனிதமான காவிரி நதிக் கரையில் கொக்கராயான் காண் என வாகீச பெருமானால் பாடப் பெற்றதும் , செங்கல் தொழிலில் சிறந்து விளங்குவதுமான கொக்கராயன் பேட்டையில் 2000 ஆண்டுகள் தொன்மை வாய்ந்த சோழ மன்னர்களால் கட்டப் பெற்ற ஸ்ரீ சௌந்தர நாயகி சமேத ஸ்ரீ பிரம்மலிங்கேஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது.


இத்திருகோயில் பெருமை அளவிடற்கரியது ....

திருத்தல இறைவன் சுயம்புலிங்கம், வரப்பிரசாதி, சான்னித்யம் மிக்கவர், கருவறையில் அதிர்வலைகளை உணரலாம்.
சைவ வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக திருத்தில்லையில் உள்ளது போல் பாமா, ருக்மணி சமேத ஸ்ரீ வேணுகோபாலன் சந்நிதி ஆஞ்சநேயருடன் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
இத் திருத்தலத்தில் வீற்றிருக்கும் ஸ்ரீ பைரவர் நாய் வாகனமின்றி விளங்குகிறார் . இந்த அமைப்பு வேறு எங்கும் கிடையாது. சத்ரு தோஷ பரிகார மூர்த்தியாக விளங்குகிறார். பூரட்டாதி நட்ச்சத்திரக்காரர்கள் வணங்க வேண்டியவர்.
இத்திருத்தல இறைவி மாங்கல்ய தோஷம், புத்திர தோஷம் நிவர்த்தி செய்வதில் வரப்பிரசாதி.
இறைவன் கர்ப்ப கிரகத்தைச் சுற்றி 3 சுவர்களிலும் கற்கதவுகள் அமைக்கப்பட்டு உள்ளன. இதில் சாவி பொருத்துவதற்கான துளைகளும் உள்ளன. இது போன்ற அமைப்பு வேறெங்கும் கிடையாது.
"கல் கோழி கூவும், கல் கதவு திறக்கும், அப்போது கலியுகம் அழியும்" என்பது ஐதீகம்.
ஒரே கல்லால் செதுக்கப்பட்ட மிகப்பொ¢ய தீபஸ்தம்பம் உள்ளது.
ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ முருகப் பெருமான், ஸ்ரீ தக்ஷ¢ணாமூர்த்தி, ஸ்ரீ லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை, சண்டிகேஸ்வரர், நவ கிரஹங்கள், சூரிய பகவான், சப்த கன்னிமாதாக்கள், ஆகிய மூர்த்திகள் ஒருங்கே அமையப்பெற்ற சிவஸ்தலம். சனி பகவானுக்கு தனி சந்நிதி உள்ளது.
சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு விஜய நகரப்பேரரசை ஆண்டுவந்த கிருஷ்ணதேவராயர் இத்திருத்தலத்திற்கு வந்து வழிபட்டதற்கான அவர் காலத்து கல்வெட்டுகள் இங்கு காணப்படுகின்றன.


Sunday, May 29, 2016

குடும்ப மகிழ்ச்சி கூட்டும்  ரவிகுல மாணிக்கேஸ்வரர் ..
தாதாபுரம் .....விழுப்புரம் மாவட்டம் ..


ராஜராஜ சோழனின் தமக்கை குந்தவை நாச்சியார் தன தம்பியின் நினைவாக அதே கலைநயத்துடன் கட்டிய திருகோயில் ஒன்று இன்று கிராமம் மக்கள் பொக்கிஷம் என பாதுகாக்கப்பட்டு வருகிறது ,,,,

ராஜ ராஜ புறம் என்பதே மருவி இன்று தாதாபுரம் ஆகிவிட்டது ...
திண்டிவனம் வந்தவாசி சாலையில் வெள்ளிமேடு பேட்டை கூட்டு ரோடு என்று கேட்டு இறங்கி இத்திருகோயில்  இருக்குமிடம் அடையலாம் .....

ஷேர் ஆட்டோ வசதி உண்டு ...
தினசரி ஒரு வேளை பூசை நடைபெறுகிறது ....
திண்டிவனத்திலிருந்து 15 கிலோ மீட்டர் 





Saturday, May 28, 2016

நிம்மதி தரும் சன்னதி--தேவூர்  
இறைவர் திருப்பெயர் : தேவபுரீஸ்வரர், தேவகுருநாதர்
இறைவியார் திருப்பெயர் : தேன் மொழியம்மை, மதுரபாஷிணி
தல மரம்  : வெள்வாழை
தீர்த்தம்   : தேவதீர்த்தம்
வழிபட்டோர்  : குருபகவான், இந்திரன், குபேரன், சூரியன், கௌதம முனிவர்.

தல வரலாறு

  • தேவர்கள், வழிபட்டதால், இப்பெயர்.
  • குபேரன் வழிபட்டு, சங்கநிதி, பதுமநிதி பெற்ற தலம்.

சிறப்புகள்

  • கோச்செங்கணாரின் மாடக் கோவிலாகும்.
  • பிற்காலப் பாண்டியர், விஜயநகரத்தார் கல்வெட்டுகள் உள்ளன.

இது, கீழ்வேளூர் இரயில் நிலையத்திற்கு தெற்கே 3-கி.மீ. தூரத்தில் உள்ளது. திருவாரூரிலிருந்து வலிவலம் செல்லும் நகரப் பேருந்தில் இப்பதிக்குச் செல்லலாம்.



குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் 

இருக்கும் குன்றக்குடி.....சிவகங்கை மாவட்டத்திலுள்ள  மிக புகழ் வாய்ந்த ,திரளான பக்தர்களை ஈர்க்கும் , அதிக வருமானம் பெறுகின்ற திருகோயில்களுள் ஒன்று ...
பிள்ளையார்பட்டி மிக அருகில் உள்ளது ...அடிகளார் பிறந்த தலம் ....குடைவரை வகையை  சேர்ந்த தலம் ...

இவை  அனைவரும் அறிந்ததே ....அனால்  அன்பர்களே ...மனதை வருத்தும் செய்தி ஒன்றை இங்கே உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் ...அது என்னவென்றால் ....குடைவரை கோயிலில் அடிவாரத்தில் குடிகொண்டிருக்கும் அம்மைஅப்பனாகிய நம் பெருமானை , நம் தந்தையாகிய இறைவனை, சிவபெருமானை திருகோயில் நிர்வாகமும் சரி பக்தர்களும் சரி வழிபடாமல் புறக்கணிப்பதே யாகும் ...

மிக  நேர்த்தியான பிரம்மாண்டமான மூலவர் ...மிகப்பெரிய பைரவர் சிலை...என இங்கே அதிசியக்க தக்க சிறப்பம்சங்களை அதிகம் பெற்றிருந்தாலும் ...ஒரு விளக்கேற்றவோ , ஒரு வஸ்திரம் அணிவிக்கவோ ...ஏன் ஒரு முழம் பூ அவர் திருமேனி மீது சாற்றவோ கூடவா ஒருவருக்கும் மனதில்லை?

அவர் இல்லாமல் ஏது ஆண்ட சராசரங்கள்?ஏது உலகம்? ஏது நீங்கள் ,நான்? யாரையும் குற்றம் சொல்லவேண்டும் என்பது என் எண்ணமல்ல..

படி ஏறி முருகனை வணங்க செல்லும் பக்தர்கள் முதலில் அடிவாரத்தில் குடிகொண்டிருக்கும் ஈசனை வழிபட்டு அல்லவா மேலே செல்ல வேண்டும் ? அது தானே மரபு? அது தானே முறை? திருகோயில் நிர்வாகம் இதனை செயல் படுத்தினால் என்ன ? ஒரு வழிகாட்டி பலகை வைக்கலாமே? அர்ச்சகர்களை பணியமர்த்தலாமே ?
என்ன குறைந்து விட போகிறது ?

கலை நயம் மிக்க ஒரு திருகோயில் கண்டுகொள்ள படாமல் விட படலாமா?
அன்பர்களே ,.... என் ஆதங்கத்தை கூறி விட்டேன் ....இனி உங்கள் விருப்பம் .......


Monday, May 23, 2016

சிறுநல்லூர்  சிவன் ....
மதுராந்தகத்திலிருந்து  7 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள  இந்த கிராமத்தில் ஆவுடையார் புதைந்த நிலையில்  இந்த சிவலிங்க திருமேனி உள்ளது ...

பூசை புனஸ்காரங்கள்  எதுவும் நடைபெற வில்லை..

தொடர்புக்கு திரு முத்துகுமரப்பா-9443056500, திரு குமரன் 9159009921, திரு பிரசன்னா வெங்கடேசன் 9442531607. பேருந்து சென்னை- அணைகட்டு  (88)  செங்கல்பட்டு- கூவத்தூர் நிறுத்தம் சிறுநல்லூர்.  

சதுர பீட ஆவுடையாருடன் காணப்படுகிறார் இறைவன் ...

அருகில் குளம்  காணப்படுகிறது


Friday, May 20, 2016

உத்தாணி  ஐராவதேஸ்வரர் ---பாபநாசம் 

அன்பர்களே  ,

தஞ்சை மாவட்டம் , பாபநாசம் அடுத்து உள்ள உத்தாணி பேருந்து நிறுத்ததிலிருந்து நேர் எதிரே  அடர்ந்த ஒரு வன பகுதிக்குள் இத்திருகோயில் அமைந்துள்ளது .....

தற்போது பிளக்ஸ் போர்ட் வைத்துளார்கள்...

பாதுகாக்கப்பட்ட வன பகுதி  என்பதால், அஸ்பெஸ்டாஸ்  கூரை  வேய்ந்த  ஒரு  சிறிய  திருகோயிலில் இறை திருமேனிகள் அருள்புரிகின்றார்கள் .....

இறைவன் மிக பெரிய  அழகிய  திருமேனி ...வைத்த கண் வாங்காமல்  பார்க்கலாம் ...அத்தனை அழகு ....அன்னையும் அப்படியே ...

இங்கு  ஓயா மணி சித்தர் என்பவர் ஜீவசமாதி உள்ளது ....
இவர் இன்றும் இத்திருகோயில் வளாகத்தில் அருவமாக உள்ளார் என்று நம்பப்படுகிறது...பௌர்ணமிதோறும்  இவருக்கு  சிறப்பு வழிபாடுகள்  நடக்கிறது ..

இவரை வணங்குவதால் வாழ்கையில்  அனைத்து  துன்பங்களும் விலகி நிம்மதி பிறக்கிறது ....கஷ்டங்கள்  விலகுவதாக  நம்பிக்கையுடன் இங்கு வரும் பக்தர்கள் நினைக்கிறார்கள் ...

மேலும்  ஐராவதேஸ்வரரை  இங்கு வந்து வழிபடுவதால் திருமண தடை  விலகுகிறது ...தீராத  நோய்கள்  தீர்கின்றன ....

இவர்  இந்திரனின்  யானையான  ஐராவதம் தன் சாபம் நீங்குவதற்காக வணங்கிய  பெருமான் ...

நீங்கள்  சென்று  வணங்க  வேண்டாமா?  இன்னும் என்ன தாமதம் ? உடனே  புறப்படுங்கள்!!...




ஜமீன் கொரட்டூர் ---திருவள்ளூர் மாவட்டம் 

கொரட்டூர் என்ற இடம்  சென்னை -சென்ட்ரல்  மார்கத்தில் உள்ளது ..இது  அதுவல்ல ....

திருவள்ளூர்  மாவட்டம் , திருவள்ளூர்  பூந்தமல்லி சாலையில்  உள்ள சிறிய  கிராமம் ...

இங்கு அதிகம்  அறியபடாத, அழகிய  திருகோயில் தான்  பாலீஸ்வரர் திருகோயில் ...

சிறிய    கோயில் தான் என்றாலும்  இறைவன்  சிறப்பான  பலன்களை  தர வல்லவர் ....

ஒரு  சிவாலயத்திற்கான அனைத்து  சந்நிதிகளும்  சிறப்புற அமைந்துள்ளன இங்கு ...

அமைதியான  சூழ்நிலையில் இருக்கிறது இந்த  திருகோயில் ...

அன்பர்களே ....கோயில்  பூட்டியிருந்தாலும்  அருகில் உள்ளவர்கள்  திறந்து  தரிசனம்  செய்து வைப்பார்கள் ...

எனவே  தயங்காமல்  சென்று  தரிசித்து  வாருங்கள் ....