Saturday, April 30, 2016

திட்டை  ராஜகுரு 

குரு  காடாட்ஷம்  பெற  திட்டை  வசிஷ்டேஸ்வரர்  திருகோயிலில்  கோயில்  கொண்டுள்ள ராஜ குருவை  மனதார  வணங்குங்கள் ..

மூலவர்  வசிஷ்டேஸ்வரர்  வசிஷ்டர் முனிவரால்  வணங்கப்பெற்றவர் ..
அக்னி ஸ்வரூபமாக விளங்குபவர் .....எனவே கருவறை  மிக உஷ்ணமாக இருக்கும்  என்பதால்,  இப்பெருமானுக்கு  நேர் மேலாக சூரியகாந்த  கல்லும் சந்திர காந்த  கல்லும்  பதிக்கப்படுள்ளது ....

இந்த  கற்கள் காற்றின் ஈர பதத்தை உறிஞ்சி நீராக  மாற்றி 25 நிமிடங்களுக்கு  ஒருமுறை இறைவன்  மீது  சொரிகிறது .....

இறைவனை  குளிர்ச்சி படுத்தவே  இப்படி  அமைத்துளார்கள்....

இங்கு  உறையும்  இப்பெருமானையும் , ராஜகுருவையும்  வணங்குவதால் 
அனைத்து க்ரஹ தோஷங்களும் விலகும் .....
திருமண தடை நீங்கும் .....மழலை பேரு , செய் தொழிலில் வளர்ச்சி 
மேற்கல்வி அனைத்தும் பெறலாம் .....

திட்டை பிரஹார மஹா லிங்கேஸ்வர பெருமான் (படத்தில்)








Friday, April 29, 2016

எண்கண்  பிரம்மபுரீஸ்வர பெருமான் 

பிரணவத்தின் பொருள் தெரியாததால் முருகனின் சீற்றத்திற்கு உள்ளான பிரம்மன் தன பதவியை இழந்து, இத்தலத்திற்கு வந்து இங்கு உறையும் பிரம்மபுரீஸ்வரரை தன  எட்டு கண்களை பெயர்த்து எடுத்து மலர்களாக இறைவனுக்கு அர்பணித்து வழிபட்டான் ....

தன்  இழந்த பதவியை அடைந்தான் என்பது தல வரலாறு .....
இதனால் தான் எட்டு கண்கள் என பொருள் படும் எண்கண் என இத்தலம் வழங்கபடலாயிற்று.....

ஆனால் இங்கு  முருகனே பிரதான தெய்வமாக  விளங்குகிறார் ...
ஆறு முகங்களுடன் மயில் மீது அமர்ந்த  கோலம் ...மிக அற்புதமாக வடிக்கப்படிருக்கும் இந்த சிலை முழுதும் மயிலின் இரண்டு கால்கள் மட்டுமே தாங்கி பிடித்திருக்கும்  வகையில் செதுக்கப்பட்டுள்ளது ...

அன்பர்களே  மிகப்பெரிய  கற்றளியான இத்திருகோயில் குடந்தை திருவாரூர் மார்க்கத்தில் சிமிழி அடுத்து உள்ளது ....
பிரதான சாலையிலிருந்து மூன்று  கிலோமீட்டர்  பயணிக்க வேண்டும் 
பேருந்து  வசதி குறைவு ஆதலால் பக்தர்கள் தங்கள் சொந்த  வாகனங்களில் வருவது நல்லது ....
வாழ்வில் ஒருமுறையேனும் இத்தலத்தை தரிசிக்க வேண்டும் ....அன்பர்களே...அத்தனை அற்புதமான , மிக புராதனமான திருகோயில் இது ....

இது தவிர  இங்கு மற்றொரு பிரம்மபுரீஸ்வரர் திருகோயில் மிக சிதிலமடைந்த  நிலையில் உள்ளதாக  அர்ச்சகர் தெரிவித்தார் ...
இரவாகிவிட்டபடியால் என்னால்  தரிசிக்க இயலவில்லை ....



Thursday, April 28, 2016



தொண்டைநாடு திருகோயில்கள் உடைத்து

 என்பது ஆன்றோர் மொழி.இதன் முக்கிய பகுதியான திருவள்ளூர் மாவட்டம் எண்ணற்ற திருகோயில்களை தன்னகத்தே கொண்டு விளங்குகிறது .
 குறுமுனி அகத்தியர் 108 சிவலிங்கப்ப்ரதிஷ்டை
இம்மாவட்டத்தில் செய்து வழிபட்டுள்ளார்.
அவர் 108 ஆவதாக வழிபட்ட நூற்றிஎட்டீஸ்வரர் திருகோயில்
திருவள்ளூர் மாவட்டம் சின்னகாவணம் என்னும் கிராமத்தில் அமைந்துள்ளது.


இதன் மற்றொரு சிறப்புஎன்னவென்றால் தலவிருட்ஷமான
எறேழிஞ்சில் மரம். இம்மரத்திலிருந்து சிதறும் விதைகள்
மெல்ல மெல்ல நகர்ந்து சென்று மீண்டும் இம்மரத்தின் மீது ஒட்டிகொள்கிறது.
இது ஜீவாத்மாவாகிய நாம் இறுதியில் பரமாத்மாவாகிய இறைவனை சென்று அடைவதை உணர்த்துகிறது.

இத்திருகோயில் இரண்டு மூலவர்களை பெற்றிருக்கிறது .....சதுர்வேத புரீஸ்வரர் என்பது திருநாமம் ...

பல்வேறு  சிறப்புகள்  பெற்றிருந்தாலும் இத்திருகோயில் பக்தர்கள்  வருகை  இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது .....இது தான்  வேதனையில் ஆழ்த்துகிறது ..

சின்னகாவணம்  பொன்னேரி அருகில் பழவேற்காடு  செல்லும்  வழியில்  உள்ளது ...



Wednesday, April 27, 2016

பழையவலம்  மேவிய  பரமன் -- திருவாரூர் 

சத்தியாதாக்ஷி சமேத  அகஸ்தீஸ்வரர் பெருமான்  திருகோயில் ....


திருவாரூர் பல புராதனமான திருகோயில்களை தன்னகத்தே கொண்டு விளங்கும் முக்தி தலமாகும் ...
திருவாரூரிலிருந்து கங்களாஞ்சேரி செல்லும் வழியில் உள்ள ஒரு கிராமம்  பழயவலம் ..காலம் சென்ற  என் தகப்பனார் , பெரிய பாட்டனார்கள்  வாழ்ந்த ஊரும் இதுவே ....

இங்குள்ள மிகப்புராதனமானதும் , மிக ப்ரம்மாண்டமானதும், என் பாட்டனார்களால் பல யாகங்களும் ஹோமங்களும் நடத்தபெற்றதும்  ஆன திருகோயில்  தான்  ஸ்ரீ சத்தியாதாக்ஷி உடனுறை அகஸ்தீஸ்வரர் பெருமான்  திருகோயில் ....

மிகப்பெரிய  கற்றளி .....அன்று....
இன்றோ எஞ்சிய  சில  மிச்சங்கள் தான் உள்ளது ...
இருந்தாலும்  கருவறையில் சற்றும் சாநித்தியம் குறையாமல் அற்புதமாக  தரிசனமளிக்கும் பெருமானை கண்டால், நம் உள்ளம் குளிரும் , துன்பங்கள் பறந்தோடும் ....

சத்தியாதாக்ஷியின் கம்பீரமான உருவம் நம் கண் முன்னே இன்றும் நிற்கிறது . அத்தனை  பேரழகு ..

தேவார பாட ல் பெற்ற குருவி ராமேஸ்வரம் என்று அழைக்கப்படும் பள்ளிமுக்கூடல் தலம் மிக அருகில் உள்ளது ..விற்குடி தலமும்(வீரட்டேஸ்வரர் திருகோயில்) அருகில் தான் உள்ளது .

அது மட்டுமின்றி  கேட்டதை  கேட்டவுடன் நல்கும் , மிகுந்த  வரப்ரசாதியான , துர்கா பரமேஸ்வரி இங்கு  தான் கோயில்  கொண்டுள்ளாள் ....அவள்  இன்று  பிரபலமாக  உள்ள பலருக்கு  குல தெய்வம் ....இத்தலத்தின்  பிரதான காவல்  தெய்வமும்  அவளே .....

அன்பர்களே  தவற விடாதீர்கள் .....



Tuesday, April 26, 2016

வல்லம்  குடைவரை  கோயில்கள்  --செங்கல்பட்டு 

அறியபட்டாத  அபூர்வ  ஆலயம் 

வல்லம்  செங்கல்பட்டு அருகில் உள்ள ஒரு சிறிய கிராமம்..
யாரும் அறியாத வகையில் இங்கு  பல்லவர்கள் காலத்திய குடைவரை கோயில்கள்  உள்ளன .
இங்கு இரண்டு சிவாலயங்களும் ஒரு பெருமாள் கோவிலும் இருக்கிறது .
தற்போது ஒரு சிவாலயத்தில் பெருமான் இல்லை.
ஒன்றில் மட்டுமே வேதாந்தீஸ்வரர் என பெயர் கொண்டு பிரம்மாண்டமான லிங்கத்திருமேனியுடன் சேவை சாதிக்கிறார்.
அம்பாள்  ஞானாம்பிகை...

இங்கு மட்டுமே பஞ்ச மூர்த்திகளான சிவன் அம்பாள் விநாயகர் ,நந்தி சண்டிகேஸ்வரர் ஆகியோரை ஒரே இடத்தில் நின்றபடி காணமுடியும் ...

கிழக்கு  நோக்கிய  இறைவன் மீது  தினமும்  சூரிய கதிர்கள்  படர்வதாக  சொல்கிறார்கள் .

செங்கல்பட்டிலிருந்து இத்திருகோயில் மூன்றே கிலோமீட்டரில் உள்ளது .
1300 ஆண்டுகள்  பழமையான இத்திருகோயிலில் செதுக்கப்பட்டுள்ள   துர்க்கை விநாயகர் வடிவங்கள் பார்த்து  பார்த்து ரசிக்கத்தக்கவை ...
பிரம்மாண்டமானவை ...

ஒருமுறை  சென்று  தான்  தரிசியுங்களேன் ....



Sunday, April 24, 2016

வேதங்கள்  வழிபட்ட  வேதஸ்ரேணி (வேளச்சேரி )

வேதங்கள்  வழிபட்டதால்  இப்பெயர் பெற்றது ....
தன் பக்தனான  மார்க்கண்டனின் ,உயிரை  பற்றிக்க சென்ற  யமனை இறைவன் எட்டி உதைத்ததோடு , அவன் பதவியையும் பறித்தார் .....
பதவியை  இழந்த யமன் இத்தலத்தில் இறைவனை , தீர்த்தம் உருவாக்கி வழிபட்டான் .....
யமனுக்கு காட்சி தந்த சிவன், தண்டம் அளித்து பணி செய்யும்படி அறிவுறுத்தி அருளினார் .
எனவே  இத்தலத்து இறைவன்  தண்டீஸ்வரர் என பெயர் பெற்றார் ..

இங்கு  வந்து வணங்கினால்  இழந்த  பதவியை  மீண்டும்  பெறலாம் ...
ஆயுள் விருத்தி பெற இங்கு  வந்து  வணங்கலாம் .....
தை  முதல் நாள் இங்கு ஆதவன் இறைவனை வழிபடுகிறான் .....
அம்பாள் கருணாம்பிகை  முன்பு ஸ்ரீ சக்கரம்  பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது .

எல்லா  திருகோயில்களிலும்  நின்ற  நிலையில் காணப்படும் வீரபத்திரர் 
இங்கு  மான்  மழு  ஏந்திய வண்ணம் அமர்ந்த நிலையில் உள்ளார் ..

இவரே  இத்தலத்தின் காவல்  தெய்வமாக விளங்குகிறார் ....




Saturday, April 23, 2016

அல்லல்  படுத்தும்  நோய்களுக்கு  மாமருந்து..

வல்வினைகளுக்கு அருமருந்து ......
போகா துயரங்களுக்கு நல்மருந்து ......
நம்  படூர்  மணிகண்டேஸ்வர பெருமான் , அன்னை மரகதவல்லி .....கோயில் கொண்டுள்ள திருகோயில் தான்  அது ...

எங்குள்ளது ?
காஞ்சிபுரம்  மாவட்டம் , திருபோரூர் வட்டம் , கேளம்பாக்கம் அருகில் உள்ளது படூர் கிராமம் ...
பிரதான சாலையிலிருந்து சற்று தள்ளி அமைந்துள்ளது திருகோயில் ,
சைவ வைணவ ஒற்றுமைக்கு எடுத்துகாட்டாக .....
பெருமாள் கோயில்  முற்றுபெற்றுவிட்டது ...மணிகண்டேச்வர பெருமான் கோயில் திருப்பணி  நடைபெற்று வருகிறது ....
நிதி  பற்றாக்குறை  உள்ளது ....எனவே ...

அன்பர்களே,  நீங்களும்  இத்திருப்பணியில் பங்கு கொள்ள  வாருங்கள் ...
கருவறையில்  அற்புதமாக  கம்பீரமாக இறைவன்   குடி கொண்டிருக்கும்  அழகை காண வாருங்கள்..
அன்னையின்  அழகில் மெய்மறந்து விடுவீர்கள் ...அத்தனை  அழகு அவள்...
பெருமாளும்  அப்படியே .....நல்ல கம்பீரம் ....புகைப்படங்கள் தந்துள்ளேன் 
நீங்கள்  தொடர்பு கொள்ள  அலைபேசி எண்ணும் தந்துள்ளேன் ...
இன்னும்  என்ன யோசனை .....உடனே கிளம்புங்கள் ....மணிகண்டேஸ்வரர்  காத்துள்ளார் .......

தொடர்புக்கு :   திரு  பாலாஜி  , 988 4726014







Friday, April 22, 2016

நற்றுனையப்பரை   நம்பி  வாருங்கள் ---புஞ்சை 

அன்பர்களே ,   

பலரும்  கூற  கேட்டிருப்போம்!!!!  
கடினமாக  உழைக்கிறோம் .....ஆனால்  அதற்கேற்ற ஊதியமில்லை ...வருமானமில்லை ..... என்று ...இல்லையா?

அப்படிப்பட்டவர்கள் வாருங்கள் நனிபள்ளி ...அதாவது தேவார பாடல் பெற்ற தலமான புஞ்சை நற்றுணையப்பர் திருகோயில் ..
எங்கே உள்ளது ?

நாகை  மாவட்டம் , மயிலாடுதுறை பூம்புகார் சாலையில், செம்பொனார் கோயில் அருகில் இத்தலம் இருக்கிறது .....

இங்கு  வந்து  இப்பெருமானுக்கு வஸ்திரம் சாற்றி, அர்ச்சனை செய்து உளமார  வணங்குங்கள் ....

ஸ்திரமான பொருள் வரவு கிடைக்கும் ....தொழில்  சிறக்கும் ....
பொருள்  வரவு கூடும் ..
நம்பிக்கையுடன்  சென்று  வணங்குங்கள் ....நன்மையே தருவார்  நற்றுணையப்பர் ....


Thursday, April 21, 2016

உருக்குலைந்த  நிலையில் உமையொருபாகன் திருகோயில் ---அசூர் -குடந்தை 

அன்பர்களே ......,

குடந்தையிலிருந்து  மூன்று  கிலோமீட்டர் தூரத்தில் நீலத்த நல்லூர் சாலையில் உள்ளது  அசூர் ....
குளங்கள் , நெல் வயல்கள்  நிறைந்த அழகிய  சிற்றூர் ...இங்குள்ள சிதைந்த ,திருகோயில் ஒன்றில் ,இறைவன்  தான்தோன்றீஸ்வரர்  என பெயர்  கொண்டு,  கருவறையில்,நீண்ட  பாணத்துடன் விளங்குகிறார் ..

அம்பாள்  சுமார் 5 அடி  உயரத்துடன்  கம்பீரமாக விளங்குகிறாள் ...
இது  தவிர  பெரிய  லிங்கத்திருமேனி ஒன்று  கோவிலின்  வெளியே காணப்படுகிறது ...
தக்ஷிணாமூர்த்தி சிலை திருடப்பட்டு , மிகுந்த சிரமத்திற்கிடையில் மீண்டும் பெறப்பட்டுள்ளது ...

கோவிலின்  முன்பாக  பெரிய  குளம் உள்ளது ....
மிகவும்  உருக்குலைந்த  நிலையில்  இத்திருக்கோயில் காணப்படுகிறது .
மகாமகத்திற்காக குடந்தை அருகே உள்ள பல கோயில்கள் சீரமைக்கப்பட்டன ...ஆனால்  என்ன காரணத்தினாலோ இத்திரு கோயில் கண்டுகொள்ளப்படவேயில்லை. கோயில் சொத்துக்கள் இருந்தும் அவை ஆக்கிரமிப்பில் உள்ளது ....

அருகில்  ஓய்வு பெற்ற  ஆசிரியர் திரு .ரவி  அவர்களை தொடர்பு கொண்டு விட்டு , நீங்கள்  சென்று  தரிசிக்கலாம் .....
அவர் தொலைபேசி எண் : 0435--2443897

Wednesday, April 20, 2016

பொன்பரப்பி  ஸ்வர்ணபுரீஸ்வரர் --விழுப்புரம்  மாவட்டம் 

நவபாஷணத்திற்கு இணையான சூரியகாந்த கல்லினால்  செய்யப்பட ஐந்தரை அடி  உயர 16 பட்டைகளை  கொண்ட  சோடச லிங்கம் .....
ஆவுடையாரும் பதினாறு  பட்டைகளை கொண்டிருப்பது  சிறப்பு ...

ஆவணி  பௌர்ணமி  மற்றும் பங்குனி உத்திர நாளில்  சூரியன்  நந்தியின் இரு கொம்புகளுக்கிடையில் நுழைந்து  இறைவனை  வழிபடுகிறான் ...

காகபுஜண்டர் இத்திருகோயிலில்  சமாதி  அடைந்துள்ளார் ...

இத்தலம்  பஞ்ச பூத தலத்திற்கு இணையாக  கருதப்படுகிறது .....
கருவறை மிக உஷ்ணமாகவும் , உக்கிரமாகவும் இருக்கும் ...
கருவறை  தீபம், இதன் காரணமாக  துடித்து கொண்டே  இருக்கும் ....

இங்கு  பால்  தேன், தயிர் திரவியங்கள் உட்பட 16 வகையான  அபிஷேக பொருட்களால் இறைவனுக்கு  அபிஷேகம்  செய்யப்படுகிறது ,,,,,,
இவை  துளியும்  பிசராமல் ஒரே நேர்கோட்டில்  ஆவுடையாரின்  அடிப்பாகம் வரை இறங்கி  லிங்க  பீடத்தில்  ஐக்கியமாவதை  காணலாம் ....

சிவனின்  தலையில்  சூடிய  சந்திர  கலையிலிருந்து  தோன்றியவர்  காகபுஜண்டர்நினைத்த  நேரத்தில்  காக்கை வடிவம் எடுக்க கூடியவர் ..
இவரால்  பிரதிஷ்டை  செய்யப்பட  இப்பெருமானை வணங்குபவர்களுக்கு சந்திர  தோஷம் , சனி தோஷம் எதுவாய் இருந்தாலும் நீங்கும் ...

அம்பாள்  இங்கு மகாலஷ்மி அவதாரமாக  விளங்குவதால் ஸ்வர்ணாம்பிகை
என  வழங்கப்பபடுகிறாள்...
 எங்கே உள்ளது?

சேலம்  மாவட்டம்  ஆத்தூரிலிருந்து  கள்ளகுறிச்சி  செல்லும் வழியில் உள்ள  அம்மையகரம் ....இங்கிருந்து  மேற்கே ஒரு கிலோமீட்டரில் உள்ளது பொன்பரப்பி .....