Monday, March 28, 2016

குறும்பலா நாதரின் அருள் பெற வாருங்கள்!!!!!


➨நீண்ட வரிசையில் கால் கடுக்க காத்திருக்க வேண்டாம். மிகுந்த பொருட் செலவு இல்லை.
➨முக்கியமாக *ஜருகண்டி * இல்லவே இல்லை.
➨விஸ்ராந்தியாக இறைவனை எப்போது வேண்டுமானாலும் தரிசனம் செய்யும் வசதி உள்ளது.
➨திரு குற்றாலம் சென்று வழிபட இயலாதவர்கள், இங்கு நமக்காக எழுந்தருளியுள்ள குழல்வாய்மொழியம்மை
உடனாய குறும்பலா நாதரை வழிபடலாம்.
➨மிக அருகில், மேல்மணம்மேடு என்னும் இடத்தில் (பூந்தமல்லி --- திருவள்ளூர் ரோடு) கோவில் கொண்டுள்ளார்
இவர்.

பயன் படுத்திக்கொள்ளுங்கள் அன்பர்களே!!! குறும்பலா நாதரின் அருள் பெற வாருங்கள்!!!!!



Sunday, March 27, 2016

பலன்  தரும்  பரிகார தலம் -குரங்கணில் முட்டம் 

சிவ பக்தனான வாலி (குரங்கு) வழிபட்டதால் வாலீஸ்வரர் என்பது இறைவன் திருநாமம்...
அணில் மற்றும் எமன் காக்கை (முட்டம்) வடிவில்  வழிபட்டு சாப விமோசனம்  பெற்றதாக  தல வரலாறு சொல்கிறது ...
எனவே குரங்கணில் முட்டம் என வழங்கலாயிற்று..

தீர்த்தம் :காக்கைமடு தீர்த்தம் ....

காஞ்சிபுரம் --வந்தவாசி  சாலையில்  தூசி அடுத்து இரண்டு கிலோ மீட்டரில் இத்திருகோயில் உள்ளது ...பேருந்து வசதி குறைவு ..
எனவே ஆட்டோவில் செல்வது நலம் ...

தேவார  பாடல் பெற்ற தலம் ..இறைவி இறையார் வளையம்மை...
சித்திரை  மாதத்தில் ஆதவன் குறிப்பிட்ட  நாட்களில்  இறைவனை  வழிபடுகிறான் .....

இங்கு வந்து  வழிபட , கல்வி கேள்விகளில்  ஞானம் பெறலாம் ....
முக்தி ஸ்தலம் .....இறைவிக்கு வளையல் வாங்கி  கொடுத்து  நேர்த்திகடன் செலுத்துகின்றனர் ...அவ்வாறு செய்தால்  சுக பிரசவம் ஆகும் ...மழலை பேரு கிட்டும் ...

அடியார்கள்  அவசியம்  வணங்க  வேண்டிய திருகோயில் ....


பரிதாப  நிலையில்  பாலையூர்  திருகோயில் ......

அன்பர்களே!!! வழிபாடு நடைபெறாத , பூசைகள் நித்யானுஷ்டங்கள் அறவே  நின்று  போன  திருகோயில்கள் சிலவற்றை   என்னால் முடிந்த அளவிற்கு உங்கள்  கவனத்திற்கு கொண்டு வருவதே என்னுடைய  நோக்கம் ....

உங்கள்  பார்வைக்கு  வரும் இத்தகைய  திருகோயில்களுக்கு விளக்கேற்ற சிறிதளவவேனும்  எண்ணெய் வங்கி  தந்து, உதவுங்கள் ....
இந்த கைங்கர்யம் உங்கள் குடும்பத்தை கவசம் போல் பாதுகாக்கும் .

அப்படிப்பட்ட,  காலத்தின் கோலத்தால் நலிவடைந்த   ஒரு கோயில் தான்  பாலையூர் ....எங்குள்ளது?
குடந்தை -காரைக்கால் சாலையில் S.புதூர்  தாண்டியதும், வளையும் பிரதான சாலையிலேயே நீங்கள் இத்திருக்கோயிலை பார்த்திருக்கலாம் ..
மிஞ்சியிருப்பது  வெறும் இடிபடுகளே ....அம்மன் சந்நிதி இடிபாடுகளில் சிக்கியுள்ளது ...ஆக்கிரமிப்பும் உள்ளது .....
இறைவனை மட்டும் ஒரு அஸ்பெஸ்டாஸ் கூரையில் தற்போது வைத்துள்ளார்கள் ..

வழிபாடுகள்  நடைபெறுகிறதா ? என்பது தெரியவில்லை !அது அந்த இறைவனுக்கு தான் வெளிச்சம் .....



Saturday, March 26, 2016

எமை ஆளும்  ஈசன் --அரசவனங்காட்டில் 

கைலாசநாதர்  என்னும்  பெயர்  தாங்கி அருள்கிறான் ......
மிக பழமையான திருகோயில் .......புராதமானதும் கூட ..
எனவே  திருப்பணி  செய்யும் கட்டாயத்தில்  உள்ளது ...
முதலில்  சீர் செய்ய  வேண்டியது எதிரே  உள்ள  திருக்குளத்தை தான் ...
மிக பெரிய  குளம் புதர் மண்டி  இன்று  சிறிய  குட்டை போல் காட்சியளிக்கிறது .
சென்ற  சிவராத்திரி அன்று  தீபாராதனை  ஒளியில்  கைலாசநாதர் ஒளிரும்  காட்சி ..

எங்கே  உள்ளது ?

குடந்தை ---திருவாரூர்  பாதையில் பிரதான சாலையில் இத்திருகோயில் அமைந்திருக்கிறது.குடவாசல்  வட்டம் ...பிரசித்தி  பெற்ற  என்கண்  அருகாமையில் உள்ளது .....சிறிதும் பெரிதுமாக  அருகில்  பல  திருகோயில்கள் உள்ளன ....




Thursday, March 24, 2016

நகரேஷு காஞ்சி 

பங்குனி உத்திர திருநாள் அன்று பெருமான் ஏகாம்பரேஸ்வரர்......அன்னை காமாக்ஷியுடன் அருள்பாலித்த அற்புத காட்சி உங்கள் பார்வைக்கு:
அன்பர்களே இத்தனை கம்பீரமான தங்க ரிஷப வாகன சேவை காண்பது அரிது ...வேறெங்கும் காண கிடைக்காதது ...
தவிர ,இது போன்று அன்னை காமாக்ஷியின் பின்னல் ஜடை அலங்காரம் வேறெங்குமே காண முடியாது .....
கண்டு களியுங்கள் .....
போட்டோவின்  மீது கிளிக்  செய்து பாருங்கள் ......அகன்ற  காட்சிக்கு 







சின்னாபின்னமாகிபோன  ஓடாச்சேரி திருகோயில் 

அன்பர்களே  ஒரு கிராமத்தின்  செழிப்பை  அங்கு  உள்ள திருகோயிலின்  நிலைமையை  வைத்து  சொல்லிவிடலாம் .....

திருகோயில்கள்  இல்லாத ஊர்  சுடுகாட்டிற்கு சமானம்...
எனவே தான் இதை  நன்கு  உணர்ந்த  முன்னோர்களால்  பல  திருகோயில்கள் நிர்மாணிக்கப்பட்டது ....

அவற்றிற்கு  ஏராளமான சொத்துக்கள் , பராமரிப்பிற்கென ஒதுக்கப்பட்டது ...

ஆனால்  நமது  மதியீனம் ,பேராசை மற்றும் பொறுப்பின்மையால்  நாம்  அவற்றை  இழந்து வருகிறோம் ....
அன்பர்களே ........திருவாரூர்  மாவட்டம் அதிகமான  திருகோயில்களை கொண்ட  பெருமை  உடையது .....அங்கு  பிறந்தாலே முக்தி  கிட்டும் ....
அதன்  அருகே உள்ள   ஓடாச்சேரி கிராமத்தின் திருகோயிலின்  நிலை தான்  இது .....
பல்லாண்டுகளாக  இறைவனின்  வாசம்  இந்த  கொட்டகையில்தான்.....
இறைவன்  பெயர் வேதபுரீஸ்வரர் , இறைவி அகிலாண்டேஸ்வரி 
மற்றும்  பரிவார மூர்த்திகள் அனைவரும்  இந்த  கொட்டகையிலேயே  அருள்பாலித்து வருகின்றனர் ... அருகிலேயே  குருக்கள்  அகம்  உள்ளது ...
இறைவனுக்கும் , இறைவிக்கும்  திருகோயில்  நிறுவ  அஸ்திவாரம்  போடப்பட்டுள்ளது ...ஆனால்  அதன்  பிறகு  முன்னேற்றமில்லை ....

இத்திருகோயிலின்  நிலை  முன்னரே 2004 லில் குமுதம்  பக்தி  இதழில்  வந்துள்ளது ...
ஆண்டுகள்  பல கடந்தும் அஸ்திவாரத்துடனேயே  கோயில்  நிறுத்தப்பட்டிருப்பது  மிகுந்த  வேதனை  அளிப்பதாக  உள்ளது ....

அவன் அருளாலே தான் அவன்  திருகோயில்  எழும்ப வேண்டும் ......
சிவாய  நம ......

தொடர்புக்கு :  சண்முகம்  குருக்கள் .N
ஓடாச்சேரி , சூரனூர் அஞ்சல் திருவாரூர்  மாவட்டம் 

செல்: 9865360547

Wednesday, March 23, 2016

அழிவின்  கோர  பிடியில்  அன்னுகுடி  ஆலயம் .......

அன்பர்களே ...
மிகச்சிறிய  கிராமத்தில்  கூட  எவ்வாளவு  அற்புதமான  ஆலயங்கள் நமது  முன்னோர்களால் நிர்மாணிக்கப்பட்டுள்ளது ....

நாம் தான் அவற்றின் அருமை பெருமைகள் தெரியாமல், தரிசிக்க  கூட  நேரமில்லாமல்   காலத்தை  வீணே  கடத்திகொண்டிருக்கிறோம் .....

அன்னுகுடி  தஞ்சை -குடந்தை  மார்க்கத்தில்  பாபநாசம்  வட்டத்தில் உள்ள 
ஒரு சிற்றூர் .

ஜெகன்னாத பரமேஸ்வரர் --இறைவன்  திருப்பெயர் ...திருமாலின் பெயரை தாங்கிய  இத்தகைய  பெயர்  மிக அரிது ......இறைவி  அபிராமி .....
இறைவன்  மேற்கு  நோக்கியும்  இறைவி  கிழக்கு  நோக்கியும் உள்ள தலங்கள் 
வெகு குறைவு ...அபூர்வம் .......
அதில் அன்னுகுடியும்  ஒன்று..ஜெகன்னாத பரமேஸ்வரர் --இறைவன்  திருப்பெயர் ...திருமாலின் பெயரை தாங்கிய  இத்தகைய  பெயர்  மிக அரிது ......இறைவி  அபிராமி .....
இறைவன்  மேற்கு  நோக்கியும்  இறைவி  கிழக்கு  நோக்கியும் உள்ள தலங்கள் 
வெகு குறைவு ...அபூர்வம் .....இத்தகைய  திருகோயில்கள் மிகசிறந்த பரிகார தலங்கள்  ஆகும் ...

கையில்  வெண்ணையை  வைத்துகொண்டு  நெய்க்கு  அலைவது  போல் ,
நமது  பிரச்சினைகளுக்காக எங்கெங்கோ  அலைகிறோம் ....
அன்பர்களே ,  மிகுந்த  ஆக்கிரமிப்பின்  பிடியில்  உள்ள திருகோயில் 
பிரதோஷ தினத்தன்று  நான்  சென்றபோது  பகலவனும்  தன்  பொற்கிரணங்களால்  இறைவனை  வழிபட்டார் ....

நீங்கள்  வழிபடுவது  எப்போது ? காலம் கடந்து விடும் .......முன்னரே சென்ற  
ஸ்ரீ  ஜெகன்னாத பரமேஸ்வரரின் அருளுக்கு பாத்திரமாகுங்கள்....
அவர் திருகோயிலை  சீர் செய்ய  உதவுங்கள் ..... 
(பகலவன்  வழிபடும்  திருக்காட்சி)



Sunday, March 20, 2016


அகிலம்  போற்றும்  ஆத்தூர்  திருகோயில்கள் 


ஆத்தூர் வடபாதி ஆதிசக்தி உடனுறை ஆதிலிங்கேஸ்வரர் திருக்கோயில்"..செங்கல்பட்டு அருகில் 6 கிலோ மீட்டர் தூரத்தில் பாலாற்றின் கரையில் அமைந்து உள்ளது.

இத்தலம் 1000 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டு, சோழர்கள் காலத்தில் சீரும் சிறப்புடனும் விளங்கியுள்ளது. ஆதிலிங்கேஸ்வரர் மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். மேற்கு நோக்கி அமையப்பெற்றுள்ள ஈசன் "உடல்நோய் தீர்ப்பார்' என்பது ஐதீகம்.

மேலும் காதல் தம்பதிகள் தங்கள் மனம் போல் மணவாழ்க்கை அமைய ஆத்தூர் வடபாதி சிவாலயம் வந்து பங்குனி உத்திர நன்னாளில் ஈசன் அம்பாள் திருக்கல்யாணம் கண்டால்,மணவாழ்க்கை நலமாய் வளமாய் அமையும்.

இத்தலம் அருகிலேயே ஆத்தூர் அறம்வளர்த்த நாயகி உடனுறை முக்தீஸ்வரர் திருக்கோயில்,சீட்டனாம்சேரி காலீஸ்வரர் திருக்கோயில் ,ஒரக்காட்பேட்டை திரிபுரசுந்தரி உடனுறை குணம் தந்த நாதர் திருக்கோயில்கள்  அமைந்து உள்ளன.

ஆலயதொடர்புக்கு:9445128054.


Saturday, March 19, 2016

அஷ்ட  திக்குகள் --அஷ்ட  லிங்கங்கள் 

திருவேற்காடு தேவார  பாடல் பெற்ற  தொண்டை மண்டல தலமாகும் ....இங்குள்ள வேதபுரீஸ்வர்  திருகோயிலை  சுற்றிலும்  அஷ்ட திக்  பாலகர்கள்  எட்டு லிங்கங்களை  நிறுவி  வழிபட்டுள்ளனர் ...அவை இன்றும்  உள்ளன .
அவற்றை ஒரே நாளில்  வணங்கினால்  நன்மைகள்  பல உண்டு ....

இந்திரன்  வழிபட்ட  இந்திரசேனா பதீஸ்வரர்  திருகோயில்  அவற்றில்  ஒன்று ...திருவேற்காடு  அருகில் வள்ளிகொல்லைமேடு  என்னும் இடத்தில்  உள்ளது ..
சிறிய  கோவில்தான்  என்றாலும்  இறைவன் சிறப்பான பலன்களை  அருளும் வல்லமை  பெற்றவர் .....
கண்டு  வணங்குங்கள் ......இறைவன்  அருள்  உங்களுக்கு  பூரணமாக  உண்டு ..


களப்பாகரம்--வடமட்டம் --குடந்தை

களப்பாகரம்  கைலாசநாதர்  திருகோயில் , குடந்தை-காரைக்கால்  செல்லும் வழியில் வடமட்டம் வட்டம் ,புகழ் பெற்ற  திருநல்லம் எனப்படும் கோனேரிராஜபுரம் அருகில்  உள்ள மிக பழமை வாய்ந்த  திருகோயில் ...
தற்போது  திருப்பணி  செய்யப்பட்டு குடமுழுக்கு  கண்டுள்ளது ....

தலவரலாறு  என்று  பெரிதாக  அறியப்படவில்லை ...
எனினும்  கருவறையில்  இறைவன் ஜோதிர்மயமாக காட்சியளிக்கிறார் 
பார்க்க  பார்க்க  இன்பம்  மேலிடுகிறது ..

அன்னை  மிகவும் வித்யாசமான கோலத்தில் , களைப்பாரிய விதமாக  ஒரு காலை  மடித்து ஒருகரத்தை தரையின் மீது  ஊன்றிய  கோலம்  மிக அற்புதமானது ...
வேறெங்கும்  காண கிடைக்காதது ....இங்கும்  அம்பாளுக்கு  கொலுசுகள் அணிவிக்கப்பட்டுள்ளன ...

எனவே தான்  இவ்வூர் களைப்பறிய கரம் ...மருவி  களப்பாகரம் என வழங்குகிறது ..

..