Monday, November 9, 2015
Sunday, November 8, 2015
நாலில் ஒன்று, கொரடாச்சேரி ,திருவாரூர்
நாலில்ஒன்று, இது திருவாரூர் அருகில் கொரடாச்சேரி வட்டத்தில் உள்ள ஒரு சிறிய, நகரத்தின் சாயல் துளியும் இல்லாத கிராமம்.
கடைசியாக கண்டெடுக்கப்பட்ட திருவிடைவாசல் திருத்தலம் மிக அருகில் உள்ளது.
இங்கு ஒரு சிறிய குடிசையில் கம்பீரமாக கோயில் கொண்டுள்ளார் சுக்ரீஸ்வரர். பாண்டவர்கள் வழிபட்ட பரமன் இவர். அருகில் ஓடும் ஆறும் பாண்டவ ஆறு என்றே அழைக்கப்படுகிறது.
திருகோயில் கட்ட அருகில் இடம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
கட்டப்படுவதற்கான அறிகுறிகள் தான் காணப்படவில்லை.
கொரடாச்சேரியி லிருந்து இத்தலம் இரண்டு கிலோ மீட்டரில் உள்ளது .

Thursday, November 5, 2015
குடும்ப மகிழ்ச்சி கூட்டும் மாணிக்கேஸ்வரர்,
தாதாபுரம். திண்டிவனம்
திண்டிவனத்திலிருந்து வந்தவாசி செல்லும் சாலையில் வெள்ளிமேடு பேட்டை கூட்டு ரோட்டில் இறங்கி ஆட்டோ மூலம் இத்திருத்தலத்தை அடையலாம்.
ராஜராஜ சோழனின் தமக்கை குந்தவை பிராட்டியாரால், தஞ்சையை போன்ற அதே கலை நயத்துடன் கட்டப்பட்டுள்ள திருகோயில் இது. கிராமத்து மக்களால் பொக்கிஷமாக பாதுக்காகப்பட்டு வருகிறது .தினமும் ஒரு கால பூசை நடைபெறுகிறது .
Monday, November 2, 2015
இழந்ததை மீண்டும் பெற அருள் புரியும் திருத்தலம்
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தாலூகா அச்சுதமங்கலம் என்னும் கிராமத்தில் எழுந்தருளியுள்ள காசி விஸ்வநாதரை வழிபட நாம் வாழ்வில் இழந்ததை மீண்டும் பெறலாம்.
இழந்த பொருள் மட்டுமல்லாது , இழந்த மன அமைதியையும் இங்கு வந்து வழிபட, நாம் மீட்டு கொள்ளலாம் .
இன்றும் இந்த நம்பிக்கை நிலவுகிறது.
மிகப்பழமை வாய்ந்த இந்த திருகோயில் புதுப்பிக்கப்பட்டு நேர்த்தியாக பராமரிக்கப்படுகிறது .
அர்ஜுனன் தங்கியிருந்து வழிபட்டமையால் அர்ஜுனன் மங்கலம் என்பதே
தற்போது மருவி அச்சுதமங்கலம் என்று வழங்குகிறது.
ஆலய தொடர்புக்கு : R. மோகன் 9524348725
இத்திருகோயில் புகழ் பெற்ற ஸ்ரீ வாஞ்சியம் தலத்திற்கு அருகாமையில்
அமைந்துள்ளது .
மேலும் இரு அற்புத சிவாலயங்கள் இங்கு அமைந்துள்ளன .

Saturday, October 31, 2015
பெருவேலி----மதுராந்தகம்.
கோச்செங்கன்னாயர் சிவ சபையினரின் முயற்சியால் இத்தொண்டு நிறைவேற்றப்பட்டது .
அன்னாரின் சீரிய சிவத்தொண்டு பல்லாண்டு தொடரட்டும் .
தொடர்புக்கு-திரு.பார்த்திபன் - 9787909427,திரு.பிரபு -9843669689.
Thursday, October 29, 2015
வைரபுரம் ----திண்டிவனம் --விழுப்புரம்
அருள்மிகு திருபுரசுந்தரி உடனாய ஸ்ரீ சோம சுந்தரேஸ்வர சுவாமி திருகோயில் . வைரபுரம் .
திண்டிவனம் தாலூகா , விழுப்புரம் மாவட்டத்தில், திண்டிவனத்திலிருந்து சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது இத்திருகோயில் .
கருவறையில் மிக பிரம்மாணடமான திருஉருவம் கொண்டு விளங்குகிறார்
சுந்தரேச்வர பெருமான்.
இப்பகுதில் விளங்கும் லிங்க மூர்த்தங்களில் இவரே மிகப்பெரியவர் .

Wednesday, October 28, 2015
காளிக்கு திருமண கோலம் காட்டிய தலம் ----
காளி ----குத்தாலம் -மயிலாடுதுறை
எனவே இத்தலத்தின் பெயரே காளி என்றுஅழைக்கப்படுகிறது.
அபிராமி கோயில் பத்து என்றும் சொல்கிறார்கள்.
காளி திருத்தலம் குத்தாலம் வட்டத்தில் உள்ள ஒருசிறியகிராமம்
மயிலாடுதுறையிலிருந்து வசதியாக சென்றுவர பேருந்துகள் உள்ளன.
இறைவன் திருகாமேஸ்வரர். இறைவிஅபிராமி , சுற்றிலும் உள்ளகிராம மக்களுக்கு கண் கண்ட தெய்வமாக இருந்து வருகிறாள். அபிராமி கோயில் என்றால் தான் கோவிலுக்கு வழியே சொல்கிறார்கள்.
அத்தனை பிரசித்தம் . மிக சிதிலமடைந்த இக்கோவிலை மிக நேர்த்தியாக சீரமைத்துள்ளனர் கிராம மக்கள் .
கோபுராஜபுரம், பாபநாசம் வட்டம் , தஞ்சை மாவட்டம் .
அடியார் பெருமக்களின் அன்பு கவனத்திற்கு ........
ஸ்ரீ ஸ்வர்ணபுரீஸ்வரர் திருகோயில் கோபுராஜபுரம் . பாபநாசம் ரயிலடி தாண்டியதும் அரை கிலோமீட்டர் தொலைவில் உள்ள, மிக பழமை வாய்ந்த இத்திருகோயில்,உடனடியாக திருப்பணியை துவக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது .
இத்திருக்கோயிலின் குபேர மூலையில் எழுந்தருளியுள்ள குபே ரல்லிங்கேஸ்வர ரை வழிபட, தன அபிவிருத்தி ஏற்படும் . வறுமை விலகும் .
லக்ஷ்மி கடாட்ஷம் கிட்டும் .
அம்பாள் சந்நிதி முழுதும் பழுதடைந்து விட்டது . சுவாமி சந்நிதி இன்றோ என்றோ என்று உள்ளது.

Friday, October 23, 2015
ராமலிங்கபுரம் , திருவள்ளூர் மாவட்டம் .
ராமலிங்கநாதர் திருகோயில் . கருவறையில் அற்புத அழகோடு விளங்கும் இப்பெருமானை காண கண் இரண்டு போதாது .
மிகவும் தொன்மையான இந்த திருகோயிலில் வழிபாடுகள் முறையாக நடைபெறாதது மிகவும் வருந்த தக்கது . பிரதோஷ வழிபடு கூட நடைபெறவில்லை .
செல்லும் வழி : திருவள்ளூரிலிருந்து பென்னலூர்ப்பேட்டை செலும் பேருந்துகளில் பயணம் செய்தால் ராமலிங்கபுரம் நிறுத்தத்தில் இறங்கி கொள்ளலாம் .
அருகில் திரு கோபால் என்பவர் தரிசனம் செய்ய உதவுவார் .
தொடர்பு கொள்ள
வேண்டிய அலைபேசி எண் : திரு துரை 9092391233
ராமலிங்கநாதர் திருகோயில் . கருவறையில் அற்புத அழகோடு விளங்கும் இப்பெருமானை காண கண் இரண்டு போதாது .
மிகவும் தொன்மையான இந்த திருகோயிலில் வழிபாடுகள் முறையாக நடைபெறாதது மிகவும் வருந்த தக்கது . பிரதோஷ வழிபடு கூட நடைபெறவில்லை .
செல்லும் வழி : திருவள்ளூரிலிருந்து பென்னலூர்ப்பேட்டை செலும் பேருந்துகளில் பயணம் செய்தால் ராமலிங்கபுரம் நிறுத்தத்தில் இறங்கி கொள்ளலாம் .
அருகில் திரு கோபால் என்பவர் தரிசனம் செய்ய உதவுவார் .
தொடர்பு கொள்ள
Subscribe to:
Posts (Atom)